சுரேஷ் ரெய்னாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய அணி வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேற்று அவருடைய வீட்டிற்கே சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். சச்சின் நேரில் வந்து தனக்கு வாழ்த்து கூறியது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

மேலும் சுரேஷ் ரெய்னா வீட்டில் மதிய விருந்தும் சச்சின் சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து சச்சின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இன்று சுரேஷ் ரெய்னா, அவருடைய மனைவி பிரியங்கா, மகள் கிரேசியா ஆகியோர்களுடன் நான் மதிய உணவு சாப்பிட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சுரேஷ் ரெய்னாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

சச்சின் தெண்டுல்கரின் இந்த டுவீட்டை அமீர்கான், ஷாருக்கான் உள்பட பலர் ரீடுவீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இசைப்புயலா? இளம் இசைப்புயலா? 'தளபதி 62' இசையமைப்பாளர் யார்?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தளபதி 62' திரைப்படம் வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி ரெய்டு

இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அன்புச்செழியன் மீதான புகார் வாபஸ்: கந்துவட்டி வழக்கில் திடீர் திருப்பம்

இயக்குனர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர் அன்புச்செழியனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருவது தெரிந்ததே.

அதிசயம் ஆனால் உண்மை: முதன்முதலாக இணையும் சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் ஆகியோர்களை கூறுவதுண்டு. அதேபோல் சிம்பு-தனுஷ் ஆகியோர்களும் இரு துருவங்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

அணி மாறும் எம்பிக்கள்; காலியாகிறது தினகரன் கூடாரம்

அதிமுக, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் தற்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக உருவாகியுள்ளது.