சச்சினையும் தமிழராக மாற்றிய ஹர்பஜன்சிங்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்தே தனது டுவிட்டரில் தமிழில் டுவீட் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ரஜினி பட வசனங்களில் இருந்து அவர் பதிவு செய்த தமிழ் டுவீட்டுகள் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இன்று ஹர்பஜன்சிங் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்., அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் ஹர்பஜனுக்கு தமிழில் டுவீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்., அவர் 'விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, ஹவ் எ ப்ளாஸ்ட்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடைசியில் சச்சினையும் தமிழில் டுவீட் போட வைத்துவிட்டார் ஹர்பஜன்சிங் என்று டுவிட்டரில் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது.
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்?? pic.twitter.com/UYOiCQF4mO
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com