உலககோப்பை வெற்றி குறித்து சேவாக்-சச்சின்

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்டோரின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதி சாம்பியன் பட்டம் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 216 ரன்கள் அடித்தது. கோப்பையை வெல்ல 217 என்ற இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 220 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்திய அணிக்கு முன்னாள் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் அவர்கள் தான் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது குறித்து பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிரடி மன்னன் சேவாக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த இளைஞர்கள் ராகுல் டிராவிட் கையில் பாதுகாப்பாக உள்ளனர். எல்லா புகழும் ராகுல் டிராவிட் அவர்களுக்கே. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்த இளைஞர்களின் கையில் தான் உள்ளது. நாம் இன்னும் அதிக திறமை வாய்ந்த வீரர்களை பெற்றுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

இதேபோல் இந்த வெற்றி குறித்து சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில், 'இந்த வெற்றி ஒரு நல்ல கூட்டு முயற்சி. உலகக்கோப்பை சாம்பியன்ஸ்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ராகுல் டிராவிட் அவர்களுக்கு எனது மிகப்பெரிய வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.