நாளை முதல் மீண்டும் களத்தில் இறங்கும் சச்சின் - ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் நடித்த அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் போலவே இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
முதன்முதலாக உலகப்புகழ் பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments