வர வர மரியாதை குறையுதா? அப்பா, சார் அழைத்த சாச்சனா இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும், அதில் ரவீந்திரன் அர்னவ்மற்றும் தர்ஷா குப்தா ஆகிய மூன்று பேர் வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான சாச்சனா மிகவும் குறைந்த வயது போட்டியாளர் என்ற முறையில் ஆரம்பம் முதலே வித்தியாசமாக விளையாடி வருவதாக கூறப்படுகிறது. 24 மணி நேரத்தில் அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி அதிர்ச்சி அளித்த நிலையில், அதன் பிறகு இன்ப அதிர்ச்சியாக மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில் விஜய் சேதுபதி அவரை சந்தித்தபோது, சாச்சனா அவரை "அப்பா" என்று அழைத்தார். அதற்கு விஜய் சேதுபதி, "என்னை நீ அப்பா என்று அழைக்கலாம், அல்லது சார் என்று கூட அழைக்கலாம்; எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்கக் கூடாது" என்று தெரிவித்தார். இருவரும் 'மகாராஜா’ திரைப்படத்தில் அப்பா மகளாக நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலில் "அப்பா" என்றும், அதன் பிறகு "சார்" என்றும் அழைத்த சாச்சனா தற்போது "விஜய் சேதுபதி" என அவருடைய பெயரை சொல்லி அழைக்கிறார். என்ன வரவர அவரது மரியாதை குறைகிறது என்று சாச்சனாவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து விஜய் சேதுபதி வரவிருக்கும் வாரத்தில் ஏதேனும் கேட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
At the beginning #Sachana started addressing #VJS as Appa, Then Sir , & Now #VijaySethupathi..
— Akshay (@Filmophile_Man) October 28, 2024
Amazing growth ma 👏👏#BiggBossTamil8 #BiggBossTamil#BiggBossSeason8Tamil
pic.twitter.com/J0sOKVZS8b
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments