விஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் என்பதும், இதற்கு விஜய்யின் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வந்ததை அடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வேறொரு பெயரில் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பதாகவும் அந்த கட்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இணைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பெயரை எஸ்.ஏ.சி அவர்கள் ஆரம்பிக்கும் அரசியல் கட்சியில் பயன்படுத்தக்கூடாது என விஜய் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் குறித்து எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் 10 ஆண்டுகள் கழித்து விஜய் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்பதால்தான் இந்த கட்சியை தொடங்கி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் விஜய் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டதை நான்தான் நிறைவேற்றினேன் என்றும் அதே போல் விஜய் அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என நான் ஒரு தந்தையாக நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது