இளையராஜா ராயல்டி விவகாரம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா தான் திரைப்படங்களுக்கு கம்போஸ் செய்த பாடல்களை பொதுநிகழ்ச்சிகள் மற்றும் மேடையில் பாடுவோர் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்று கூறி வருகிறார். இளையராஜாவின் இந்த கோரிக்கைக்கு திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இளையராஜா மீது பிடி செல்வகுமார் தலைமையில் தயாரிப்பாளர்கள் குழு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஒரு திரைப்படத்தில் பாடல்கள் கம்போஸ் செய்ய இளையராஜா, தயாரிப்பாளரிடம் இருந்து சம்பளம் பெற்றுவிடுவதால், அவர் இசையமைத்த பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம் என்றும், இளையராஜா பெற்ற ராயல்டியில் 50% தயாரிப்பாளருக்கு வழங்கவேண்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இதுகுறித்து கூறியபோது, 'இளையராஜாவின் பாடல் ராயல்டி தயாரிப்பாளர்களுக்கே என்றும், தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஓற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments