எஸ்.ஏ.சி ஆரம்பித்த கட்சியின் தலைவர் எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Wednesday,November 18 2020]
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அரசியல் கட்சி ஒன்று தொடங்குவதாக விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆனால் கட்சி அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களுக்குள் விஜய் வெளியிட்ட அறிக்கையில் தந்தை ஆரம்பித்த கட்சிக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேர வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா தெரிவித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது
இந்த நிலையில் சற்று முன் எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் பத்மநாபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே அக்கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது