எஸ்.ஏ.சியின் அரசியல் கட்சியில் திடீர் திருப்பம்!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தளபதி விஜய் வெளியிட்ட அறிக்கையில் ’தனக்கும் தனது தந்தை ஆரம்பித்திருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் அரசியல் அறிவிப்பும், விஜய்யின் அறிக்கையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியின் தலைவர் பத்மநாபன் அவர்களும் அந்த கட்சியின் பொருளாளர் ஷோபாவும் திடீரென தாங்கள் இந்த கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். இருப்பினும் யார் கட்சியில் இருந்து சென்றாலும் தான் அந்த கட்சியை நடத்தப்போவதாக எஸ்.ஏ.சி அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை எஸ் ஏ சந்திரசேகர் நிறுத்திவிட்டதாகவும், கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தனது அரசியல் முடிவை எஸ்.ஏ.சி மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த வதந்தி: பி.ஆர்.ஓ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து அதன் பின் அதற்கு அவரது தரப்பினர் விளக்கமளித்து கொண்டிருப்பது வாடிக்கையாக உள்ளது.

போதைப்பொருள் விவகாரம்: கணவருடன் காமெடி நடிகை கைது!

கடந்த சில வாரங்களாக இந்திய திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி,

பாம்பு பிரச்சனை: சுசிந்திரன் விளக்கத்தை வனத்துறை ஏற்று கொண்டதா?

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் பாம்பு குறித்த ஒரு காட்சிக்கு வனத்துறை விளக்கம் கேட்டு படக்குழுவினர்களுக்கு

காதலித்த பெண்ணை கைபிடித்த 'மூக்குத்தி அம்மன்' பட எடிட்டர்!

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் ஒருவரான செல்வா, 'பரியேறும் பெருமாள்,  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா

ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் ரஜினி பட வில்லன்

விக்ரம் நடித்த 'தில்' படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமாகிய வில்லன் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி, அந்த படத்தில் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்