டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு படத்தில் தளபதி?

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

பிரபல சமூகசேவகர் டிராபிக் ராமசாமி அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சியில் நடைபெறும் அக்கிரமங்களுக்கு எதிராக சட்டரீதியாக குரல் கொடுப்பவர். மில் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த டிராபிக் ராமசாமி, பின்னர் பொதுமக்களின் குறைகளை போக்குவதற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், அதில் இளவயது ராமசாமியாக தனது மகன் விஜய்யை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தியில் பாதி மட்டுமே உண்மை இருப்பதாக எஸ்.ஏ.சி வட்டாரங்கள் கூறுகின்றன. டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க எஸ்.ஏ.சி ஆலோசித்து வருவது உண்மைதான் என்றும், ஆனால் அந்த படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்பது முற்றிலும் வதந்தி என்றும் தெரிவித்தனர்.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் ஏற்கனவே விஜய் எட்டு படங்களில் ஹீரோவாகவும், இரண்டு படங்களில் சிறப்பு தோற்றத்திலும் குழந்தை நட்சத்திரமாக ஆறு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் தந்தையின் இயக்கத்தில் தளபதி நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்