முதலமைச்சர் ஆகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Tuesday,November 17 2020]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் திடீரென அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த அரசியல் கட்சிக்கு தளபதி விஜய் மறுப்பு தெரிவித்தார் என்பதும் இதனால் தந்தை-மகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் முதலமைச்சர் ஆகிறார். அதாவது நிஜத்தில் அல்ல, அவர் நடித்து வரும் ’மாநாடு’ படத்தில்தான் அவர் முதலமைச்சர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ திரைப்படம் ஏற்கனவே அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதும் அதில் எஸ்ஏ சந்திரசேகர் உள்பட பலர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சராக நடித்து வருவதாக கூறப்படுகிறது
விஜய்யின் பெயரின் அரசியல் கட்சி ஆரம்பித்து, விஜய்யை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற நினைத்த எஸ்.ஏ. சந்திரசேகரருக்கு படத்திலாவது முதலமைச்சர் கேரக்டர் கிடைத்துள்ளதே என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்