கர்ப்பிணி 'ஜெயிலர்' மருமகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கணவரே கொலை செய்ய முயற்சியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அவருக்கு மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்ணா, கர்ப்பிணியாக 'பெர்த் மார்க்' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் கதைப்படி அவரை அவருடைய கணவரே கொலை செய்ய முயற்சி செய்வதாக ட்ரெய்லரில் வெளியாகி இருக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர் ஸ்ரீராம் சிவராமன் தயாரிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெர்த் மார்க்' படத்தின் நாயகனாக 'சார்பட்டா பரம்பரை' டான்சிங் ரோஸ் நடிகர் சபீர் கல்லரைகல் நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக மிர்ணா நடித்துள்ளார்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையரங்குகளில் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் அதில் சமீர் கல்லரைகல் தனது கர்ப்பிணி மனைவி மிர்ணாவை கொலை செய்ய முயற்சிப்பதும் நடு காட்டில் கணவரிடம் சிக்கிக்கொண்ட மிர்ணா எப்படி தப்பித்து குழந்தை பெற்றுக் கொள்கிறார் என்பது போன்ற காட்சிகளும் உள்ளன.
இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன், இயற்கை பிரசவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் இது என்றும் இதில் சில திகில் கற்பனை காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments