சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என கேரள அரசு தெரிவித்தது. ஆனால் தேவசம்போர்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் வாத, பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்னும் ஒருசில நாட்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இதன்படி அவர் தனது தீர்ப்பில், '‘சபரிமலை கோவிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். உடல், உளவியல் மற்றும் பாலினம் காரணம் காட்டி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில் நான்கு நீதிபதிகள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout