சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என கேரள அரசு தெரிவித்தது. ஆனால் தேவசம்போர்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் வாத, பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்னும் ஒருசில நாட்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இதன்படி அவர் தனது தீர்ப்பில், '‘சபரிமலை கோவிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். உடல், உளவியல் மற்றும் பாலினம் காரணம் காட்டி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில் நான்கு நீதிபதிகள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

More News

சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்து கமல், குஷ்பு கருத்து

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க: அனந்த் வைத்தியநாதன் கேட்ட கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்னும் இரண்டு நாட்களில் நெருங்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட ரித்விகாதான் வின்னர் என்பது உறுதியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம்: முதல் நாளில் செய்த அபார வசூல்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழக அரசின் புதிய உத்தரவால் தியேட்டர் கட்டணங்கள் மீண்டும் உயர்வா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்கு கட்டணங்கள் உயர்ந்ததால் சினிமா ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கமல், விஷால் பாணியில் டிவிக்கு வரும் சூரி

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் மட்டுமே டிவிக்கு வருவார்கள்.