சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டின் மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,October 19 2018]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ஒருசில பெண்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்றனர். ஆனால் அவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் கவிதா என்ற பெண்ணும், அவருடன் பாத்திமா என்ற பெண்ணும் சபரிமலைக்கு சென்றனர்.

இருவருக்கும் கேரள அரசு தகுந்த பாதுகாப்பு தர உத்தரவிட்டதை சுமார் 200 காவல்துறையினர் இரண்டு பெண்களையும் பாதுகாப்பாக சன்னிதானம் அருகே அழைத்து சென்றனர். ஆனால் சன்னிதானம் அருகே ஐயப்பன் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் சபரிமலைக்குக் செல்லும் உண்மையான பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் என்றும் தங்களது செயற்பாட்டின் பலத்தை காண்பிக்க்கும் நோக்கத்துடன் செல்லும் பெண்களை அனுமதிக்க முடியாது என்றும், எனவே இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தேவசம்போர்டு உத்தரவிட்டது.

தேவசம்போர்டு கருத்தை ஏற்று கொண்ட கேரள அரசும், இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. மேலும் தடையை மீறி இரண்டு பெண்களும் சன்னிதானம் சென்றால் சன்னிதானத்தை இழுத்து மூட மேல்சாந்திக்கு பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டது. இதனையடுத்து கவிதா, பாத்திமா ஆகிய இரு பெண்களையும் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப கேரள அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஐயப்பன் கோவில் சன்னிதானத்திற்கு சில அடி தூரம் வரை சென்ற பாத்திமா என்ற பெண்ணின் வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொச்சியில் சமூக செயற்பாட்டாளர் பாத்திமா வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

More News

இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைவது ஏன்?

தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாக டிரண்ட் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில வருடங்களில் பல இரண்டாம் பாகங்கள் படம் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் வெற்றி பெறவில்லை.,

மீடூ விவகாரம், ஆண்கள் மட்டும் காரணமில்லை: பிக்பாஸ் விஜயலட்சுமி

கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் மீடூ விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்

யூத் ஒலிம்பிக்: வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு கமல் பாராட்டு

இளைஞர்களுக்கான யூத் ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று 'சர்கார்' தினம்: மெர்சல் ஆகும் சமூக வலைத்தளங்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதை இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை மெர்சலாக்க தொடங்கிவிட்டனர்

வடசென்னை - விடுபட்டுவிடக்கூடாத பதிவு

வடசென்னை - திரை விமர்சனம்