கைதான சாட்டை துரைமுருகன்....! அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்டை துரைமுருகன் பாஜக குஷ்பு குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரின், புகைப்படங்களை வைத்து அவதூறு செய்தது, மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதற்காகவும் சுமார் 5 பிரிவுகளில் இவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூரைச் சார்ந்தவர் தான் கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத். இவர் தன்னுடைய சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து சர்ச்சையான வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறை செயலாளராக இருந்தவர் தான் சாட்டை துரைமுருகன். இவர் தற்போது சாட்டை என்ற பிரபல யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வினோத் பதிவிட்ட கருத்தால் ஆத்திரமடைந்த சாட்டை துரைமுருகன், நேற்றைய முன்தினம் கார் ஷோரூக்கு சென்றுள்ளார். இவருடன் மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, எதற்காக பிரபாகரன் குறித்து அவதூறாக பேசினீர்கள் என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர், அப்போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதோடு இனி பிரபாகரன் குறித்து தவறாக பேச மாட்டேன் என்று வீடியோ வெளியிட்டு, சமூக வலைத்தளங்களில்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து வினோத்-ம் டுவிட்டரில் மன்னிப்பு வீடியோ வெளியிட்டு, சிறிது நேரத்தில் நீக்கவும் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து துரைமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை மிரட்டியதாக, வினோத் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். பிற நபர்களையும் தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கருணாநிதி மற்றும் குஷ்பு உள்ளிட்ட அரசியில் பிரமுகர்களையும், மைனர் பெண்களையும் அவமானப்படுத்தியதற்காக, IPC 153A,504,505(1)(b)IT-67,2008 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு கொடுத்த திமுக வழக்கறிஞர்:
திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர், சாட்டை துரைமுருகன் மீது புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
"இன்று(நேற்று) காலை 10 மணிக்கு திருப்பனந்தாளில் உள்ள எனது அலுவலகம் சென்றேன். அப்போது இணையதளத்தில் அவதூறாக ஒரு வீடியோ பரவுவதை கண்டேன். அதை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோவானது சாட்டை யூடியூப் தளத்தில் இருந்தது.அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன் பாண்டியன் என்னும் நபர், தன்னுடைய பதிவில் மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்தும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு வீடியோவினை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 14.29 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.
புகாரினால் பாய்ந்த வழக்கு அந்த வீடியோ பதிவின் ஒரு இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவின் குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை அவதூறாக வைத்துள்ளார். இது கோடிக்கணக்கான திமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அந்த வீடியோ பதிவினை சீடியாக புகாருடன் தாக்கல் செய்துள்ளேன். அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அழிக்க வேண்டும். மைனர் பெண் வீடியோவையும் அழிக்க வேண்டும். அவதூறு செய்த சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனால் காவல்துறையினர் சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்கை, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com