'சாமி 2' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

விக்ரம், கீர்த்தி சுரேஷ், நடிப்பில் ஹரி இயக்கி வந்த 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சிபுதமீன்ஸ் தெரிவித்துள்ளார்.

'சாமி 2' படத்திற்கு அனைவரும் கொடுத்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படத்தை வரும் செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். சரியான ரிலீஸ் தேதியை மத்திய மற்றும் மாநில தணிக்கை குழு அனுமதி கிடைத்தவுடன் அறிவிக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார். இவர் கூறியதில் இருந்து இந்த படம் செப்டம்பரில் வெளீயாவது உறுதி என்று தெரிகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனுஷின் 'வடசென்னை' மற்றும் மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' ஆகிய படங்களும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விக்ரமின் 'சாமி 2' படமும் செப்டம்பரில் வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த மாதம் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

More News

நீ என்ன பெரிய இதுவா? வைஷ்ணவியின் உண்மை முகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் துரதிஷ்டமாக பார்க்கப்படுகிறது

திமுகவில் குடும்ப சண்டை ஆரம்பமா?

ஒரு கட்சியின் தலைவர் மரணம் அடையும்போது அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதில் குழப்பம் வருவது வழக்கமான ஒன்றே.

இன்று முதல் அஜித்தின் அடுத்த பட பணி ஆரம்பமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார் விபத்து: விக்ரம் தரப்பின் விளக்கம்

பிரபல நடிகர் விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று ஆட்டோக்கள் சேதமாகி ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஒருசிலர் காயமடைந்தனர்.