நெல்லையில் இருந்து டெல்லிக்கு செல்லும் சியானின் 'ஆறுச்சாமி'

  • IndiaGlitz, [Sunday,July 02 2017]

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் 14 வருடங்கள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணி நடந்து வருகிறது.

இயக்குனர் ஹரி குழுவினர் இந்திய தலைநகர் டெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான லொகேஷன் பார்க்கும் பணியை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் நெல்லையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பாகம் டெல்லியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெல்லையை கலக்கிய ஆறுச்சாமி தலைநகர் டெல்லியில் என்ன செய்ய காத்திருக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ரம், கீர்த்திசுரேஷ், த்ரிஷா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். சிபுதமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தளபதியின் மெர்சல்: வியக்க வைக்கும் வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டது...

திரையரங்க வேலைநிறுத்தத்திற்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பாளர் சங்கம்

ஜிஎஸ்டி என்னும் புதிய வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

ஜிஎஸ்டி வரியால் எது குறையும்? எது உயரும்?

இன்று முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி என்னும் புதிய வரி நடைமுறைக்கு வந்துள்ளதால் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது வெங்கட்பிரபு டீமின் கலகலப்பான பிக்பாஸ்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து பல மிமிக்களும் வீடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

பாடகி சுசித்ரா ரிலீஸ் செய்த புதிய வீடியோ

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி கோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்தது.