ரஜினி, விஜய், சூர்யா படங்களின் பாணியில் 'சாஹோ'
- IndiaGlitz, [Friday,August 23 2019]
பிரபல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது அந்த படத்தின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்வது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை புரமோஷனுக்கு பயன்படுத்துவதை தயாரிப்பு தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு டுவிட்டரில் ஒரு எமோஜி பெறப்பட்டு புரமோஷன் செய்யப்பட்டது. அதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய திரைப்படங்களுக்கும் டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது
இந்த நிலையில் இந்திய திரையுலகின் பிரமாண்டமான படங்களில் ஒன்றான பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்திற்கும் தற்போது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டுள்ளது. டுவிட்டர் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம் 'சாஹோ' என்பது குறிப்பிடத்தக்கது
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'சாஹோ' திரைப்படத்தில் பிரபாஸ், ஷராதா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், அருண்விஜய், கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது