அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய்.. வதந்திகளை அடித்து நொறுக்கிய புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்பாவுடன் விஜய் பேச மாட்டார் என்ற வதந்தி அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தங்களது சமூக வலைதளத்தில் விஜய் தனது அப்பாவுடன் பேச மாட்டார் என்றும், பல ஆண்டுகளாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்றும், அம்மாவிடம் மற்றும் எப்போதாவது பேசுவார் என்றும் வாய் கூசாமல் கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டு வந்தனர்.
இதற்கு விஜய் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும் இந்த வதந்தி பரவி வந்த நிலையில் சற்றுமுன் எஸ்ஏ சந்திரசேகர் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அப்பா, அம்மா தோள் மீது விஜய் கை போட்டு இருக்கும் பாசமான காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் இருந்து அப்பா அம்மாவுடன் சண்டை என்ற விஜய் குறித்த வதந்தி அடித்து நொறுக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் அரசியல் கட்சி தொடர்பான சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் எந்த மன வருத்தமும் இல்லை என்றும் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments