தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து எஸ்.ஏ.சி. கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பொருளை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்றும், திநகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணி தேடினால் எப்படி கிடைக்கும்? என்றும் தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து நடிகரும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு கணவனும் மனைவியும் 100% ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்ததாக இதுவரை சரித்திரமே இல்லை. வாழ்க்கை என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். பிரச்சனை இருந்தால் தான் அது வாழ்க்கை. அந்த பிரச்சினைகளை சுமூகமாக ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொண்டு புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.
இதை பல வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் அவர்கள் கூறியுள்ளார்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
நமக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு
என்று கூறியுள்ளார்.
இதனை மனதில் வைத்து ஒவ்வொரு கணவனும் மனைவியும் வாழவேண்டும். எங்காவது ஒரு கணவன் மனைவி பிரிந்தால் கூட அதைக் கேள்விப்பட்டு நான் வருத்தப்படுவேன். ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் பிரியும் போது மிகவும் வருத்தம் ஆக இருக்கிறது.
இன்று காலை நான் கேள்விப்பட்ட விஷயம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது கனவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதை நான் ஒரு அறிவுரையாக கூறவில்லை, ஒரு ரசிகனின் குரலாக கூறுகிறேன்’ என்று எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments