விஜய் மாதிரி ஒரு நல்ல பிள்ளையை உலகத்திலேயே பார்க்க முடியாது: கோபமாக பதிலளித்த எஸ்.ஏ.சி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் விஜய் பேசுவதில்லை என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
இந்த நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு கோபமாக பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ‘என் மகன் விஜய் என்னை மதிக்கவில்லை என்று நான் எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா? நான் 80 வயது அனுபவம் வாய்ந்த ஒரு மனிதன். என் வாழ்க்கையில் நான் பல அனுபவங்களையும், குடும்ப பிரச்சனைகளை பார்த்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி எல்லாம் இருக்க கூடாது என அறிவுரை கூறுகிறேன்.
ஆனால் எல்லோரும் என் மகன் என்னை மதிப்பதில்லை என தவறாக கூறுகின்றனர். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் விஜய் மாதிரி இந்த உலகத்தில் யாருமே சிறந்தவர் இல்லை’ என்று ஆவேசமாக கூறினார்.
“There is no better son than Thalapathy Vijay in this world.” - @Dir_SAC ♥️ #Varisu pic.twitter.com/bCXrM0qpOd
— Actor Vijay Rage (@ActorVijayRage) November 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com