முருகதாஸ் செய்தது போல் லோகேஷ் கனகராஜ் செய்திருக்கலாம்: எஸ்.ஏ சந்திரசேகர்

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

’துப்பாக்கி’ படம் எடுக்கும்போது அந்த படத்தின் கதை குறித்து நான் இயக்குனர் முருகதாஸிடம் ஒரு சந்தேகம் கேட்டேன். அதை அவர் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஒரு காட்சியை கூடுதலாக வைத்தார். அதேபோல் இவரும் செய்திருக்கலாம் என ’லியோ’ படத்தின் இயக்குனர் லோகேஷ் குறித்து மறைமுகமாக எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

விமல் நடிக்க இருக்கும் ’தேசிங்கு ராஜா’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் ’பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் தற்போது கதையை பற்றி யோசிப்பதில்லை. பெரிய நடிகர்களை நடிக்க வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நினைக்கிறார்கள்.

சமீபத்தில் நான் ஒரு படம் பார்த்தபோது அதன் முதல் பாதி நன்றாக இருக்கிறது என்றும் இரண்டாம் பாதை சரியில்லை என்றும் கூறினேன். இந்த மதத்தில் ஒரு தந்தையே மகளை கொலை செய்வது போல் வழக்கமில்லை என்று கூறினேன். ஆனால் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் துப்பாக்கி படம் எடுக்கும்போது முருகதாஸ் இடம் ஸ்லீப்பர் செல் குறித்து சாதாரணமானவர்களுக்கு புரியுமா? என்று சந்தேகம் கேட்டேன். அந்த சந்தேகத்தை புரிந்து கொண்ட அவர் ஸ்லீப்பர்செல் என்றால் என்ன என்பது குறித்து ஒரு காட்சி வைத்திருந்தார் என்று கூறினார்.

எஸ்ஏ சந்திரசேகர் குறிப்பிட்ட முதல் படத்தின் இயக்குனர் லியோ படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் என்று கூறப்படும் நிலையில் முருகதாஸ் செய்ததை லோகேஷ் கனகராஜ் செய்திருந்தால் ’லியோ’ படம் இன்னும் கூடுதல் வெற்றி பெற்றிருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.