'ஒத்த செருப்பு' பார்த்ததும் பார்த்திபனிடம் உளறினேன்: எஸ்.ஏ.சந்திரசேகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து ’ஒத்த செருப்பு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்த நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது
இந்த படத்தை நான் கடந்த ஞாயிறன்று உதவியாளருடன் பார்த்தேன். இடைவேளையின் போதே பார்த்திபனை போனில் அழைத்து பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய மொபைல் எண் என்னிடம் இல்லாததால் போனில் அழைக்க முடியவில்லை. அதன் பின்னர் படம் பார்த்து முடித்ததும் போனில் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்து என்னுடைய மனைவியிடம் பார்த்து போன் நம்பரை வாங்கினேன். ஆனால் இப்படி ஒரு அருமையான படத்தை பார்த்துவிட்டு போனில் பாராட்டக் கூடாது என்றும் நேரில் சென்று பாராட்ட வேண்டும் என்றும் முடிவு செய்து நேரடியாக அவருடைய வீட்டுக்குச் சென்றேன்
பார்த்திபனை நேரில் பார்த்த பிறகு பல காட்சிகள் குறித்து பாராட்ட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே சென்றேன். ஆனால் அவரைப் பார்த்ததும் எனக்கு பேச்சே வரவில்லை. நான் ஏதேதோ அவரிடம் உளறினேன். மொத்தத்தில் படம் நன்றாக இருக்கிறது என்பதை மட்டுமே என்னால் அவரிடம் கூற முடிந்தது
என்னுடைய வாழ்நாளில் நான் படம் பார்த்தவுடன் நேரடியாக இயக்குனரை சென்று பாராட்டியது நான்கே நான்கு இயக்குனர்கள் மட்டும்தான். ஒருவர் ’சங்கராபரணம்’ இயக்குனர் கே விஸ்வநாத், இரண்டாமவர் ’அரங்கேற்றம்’ இயக்குநர் கே பாலச்சந்தர், மூன்றாமவர் புதிய வார்ப்புகள் இயக்குநர் ’பாக்யராஜ்.’ இந்த மூவரை அடுத்து தற்போது பார்த்திபனை நான் நேரில் சென்று பாராட்டியுள்ளேன்
ஒரே ஒரு கேரக்டர் இரண்டு மணி நேரம் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தை பார்த்தேன். ஆனால் மேக்கப் போடாத இந்தப் முகம் இரண்டு மணி நேரம் நம்மை உட்கார வைத்தது மட்டுமன்றி ரசிக்கவும் வைக்கிறது என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகும் என்று இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com