விஜய் அம்மா-அப்பாவின் காதலர் தின க்யூட் ஸ்டில்: இணையத்தில் வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலித்து திருமணம் செய்த பல தம்பதிகள் இன்றைய காதலர் தினத்தை தங்கள் மலரும் நினைவுகளாக பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய்யின் அப்பா அம்மாவான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகரின் க்யூட் புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மனைவி கமலா அம்மாள் தலைமையில் தான் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா திருமணம் நடைபெற்றது. எஸ்ஏ சந்திரசேகர் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர், ஷோபா இந்து என்பதால் இந்து முறைப்படி திருமணம் செய்து நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சர்ச்சுக்கு போனாலும் கோவிலுக்கு போனாலும் இருவருமே சேர்ந்தே போவோம் என்றும் திருப்பதிக்கும், வேளாங்கண்ணிக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்து சென்றுள்ளோம் என்றும் பேட்டி ஒன்று எஸ்.ஏ.சி தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது விஜய்க்கு ஆறு வயது என்றும் விஜய் தலைமையில்தான் சர்ச்சில் அந்த திருமணம் நடைபெற்றதாகவும் எஸ்ஏ சந்திரசேகர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி சர்ச்சில் திருமணம் நடந்தபோது ஷோபா ஆறு மாத கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவரின் க்யூட் புகைப்படம் வெளியாகிய நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.