'மாநாடு' படத்தின் முதல் அப்டேட்: தளபதி விஜய் கனெக்சன்

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருக்கும் 'மாநாடு’ திரைப்படத்தின் அப்டேட் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று வெளியான தகவலின்படி இன்று மாலை 6 மணி முதல் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் 'மாநாடு’ படத்தின் அப்டேட் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மாநாடு படத்தில் முதல் அறிவிப்பாக இந்த படத்தில் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அறிவிப்பிலேயே தளபதி விஜய்யின் கனெக்சன் இருப்பதால் இன்னும் அடுத்தடுத்து என்னென்ன அறிவிப்புகள் வரும் என்பதை ஆவலுடன் சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.