ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சூர்யா
- IndiaGlitz, [Monday,January 09 2017]
பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க ஜல்லிக்கட்டுவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நமது நாட்டு மாட்டு இனங்களை அழிவில் இருந்து தடுக்க ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய நடிகர் சூர்யா சுமார் இருநூறு ஜல்லிக்கட்டு காளை மாடுகள் தமிழகத்தில் இருந்த நிலையில் அது தற்போது 30ஆக குறைந்துள்ளது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
ஜல்லிகட்டு விளையாட்டினை முறையான வழிமுறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும் என்றும், நமது நாட்டு மாட்டு இனங்களை அழிவில் இருந்து தடுக்கவும் அவற்றின் வளர்ச்சியினை பெருக்கவும் முறையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் நடிகர் சூர்யா கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் அதை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும் சூர்யா கூறினார்.