முன்ஜாமீன் கிடைக்காத எஸ்.வி.சேகருக்கு கிடைத்த ஜாமீன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார். இதற்கு பத்திரிகையாளர்களிடையே எழுந்த கடும் எதிர்ப்புக்கு பின்னர் அவர் அந்த பதிவை நீக்கியதோடு, பத்திரிகையாளரிடம் வருத்தமும் தெரிவித்தார்.
இந்த நிலையில் எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது., இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. அதேபோல் சுப்ரீம் கோர்ட்டிலும் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யவில்லை. அதுமட்டுமின்றி எஸ்.வி.சேகர் மத்திய, மாநில அமைச்சர்களின் இல்ல விசேஷங்களிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை அடுத்து அவர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்று இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டதோடு எஸ்.வி.சேகருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு எழும்பூர் கோர்ட்டில் ஜாமீன் கிடைத்துவிட்டதால் இப்போதைக்கு அவர் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout