நீட் தேர்வு எதிர்ப்பாளர்களை கிண்டலடித்துள்ள பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அனிதாவின் மரணத்திற்கு பின்னர் இந்த போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றது போல இந்த போராட்டத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில், 'இனி தமிழகத்தில் எதிலும் எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது. அனைவருக்கும் அரசு வேலை.ஆபீஸ் வரவேண்டாம். சம்பளம் வீடு தேடி வரும். மகிழ்ச்சிதானே' என்று பதிவு செய்து நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கிண்டலடித்துள்ளார்.
ஆனால் எஸ்.வி.சேகருக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவருடௌட டுவீட்டுக்கு வந்துள்ள கமெண்ட்களில் சிலவற்றை தற்போது பார்ப்போம்
எப்படி சார் எல்லார் பேங்க் அக்கவுண்ட்லயும் 15 லட்சம் கிரிடிட் பண்ணிய மாதிரியா
உங்களுக்கு மக்களின் ஆதங்கம் கிண்டலாக தெரிகிறதா . கிராமத்துல இருந்து படிஞ்சி வந்து பாருங்க தெரியும் மாணவர்களின் கஷ்டம் .
எல்லாருமே உங்கள மாதிரியே நோகாம நுங்கு திங்க ஆசப்படுவாங்களா..? எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க முடிவு பண்றோம்.
இனி தமிழகத்தில் எதிலும் எந்த தேர்தலும் கிடையாது.அனைவருக்கும் மந்திரி பதவி கிம்பலம் வீடு தேடி வரும் மகிழ்ச்சி தானே .
பள்ளிகளில் எழுத படிக்க மட்டும் கற்றுக்கொடுத்து விட்டு நேரடியாக நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி கொடுத்துவிடலாமே எதற்கு பனிரெண்டுஆண்டு படிப்பு?
காயத்துக்கு மருந்து போடாவிட்டாலும் பரவாயில்லை அதை பெறிதாக்காமல் இருந்தால் சாி .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com