கொரோனாவில் இருந்து தப்பிக்க எஸ்வி சேகர் கூறிய ஐடியா
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் உலகில் உள்ள மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் உலக நாடுகளின் அரசுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இப்பொழுது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே அனைத்து மக்களையும் வீட்டில் முடங்கிக் கிடக்க வைப்பதே அரசின் ஒரே வழியாக தற்போதைக்கு உள்ளது. இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள், ‘அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சப்தம் வீட்டில் ஒலிக்கட்டும் என்று கூறி இந்த வேதம் ஒலிக்கும் ஒரு வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்த மந்திரத்தை படித்தால் விலகி விடும் என்ற அர்த்தத்தில் எஸ்.வி சேகர் பதிவு செய்துள்ள இந்த வீடியோவிற்கு டுவிட்டர் வாசிகளும் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு இக்கட்டான நேரத்தில் கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் வேதம் படிக்க சொல்லி எஸ்வி சேகர் கூறிவருவதை சமூக ஆர்வலர்களும் கண்டித்து வருகின்றனர். மக்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க உருப்படியாக ஏதாவது பிரமுகர்கள் சொல்லவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து விடுகின்றனர்.
அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சப்தம் வீட்டில் ஒலிக்கட்டும். https://t.co/D0v1nBpGQt pic.twitter.com/ls7QlCpCPn
— S.VE.SHEKHER???? (@SVESHEKHER) March 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments