ரஜினி முதல்வர், கமல் துணை முதல்வர்: அஜித், விஜய் ஆதரவு கொடுக்க வேண்டும்: எஸ்.வி.சேகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஆகிய இருவருமே கூடிய விரைவில் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதற்கான சூழல் கடந்த சில நாட்களாக உள்ளது. இருவரும் தனித்தனியாக அரசியலில் குதிப்பார்களா? அல்லது இணைந்து பணியாற்றுவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'ரஜினிகாந்த் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதில் கமல் இணைய வேண்டும். ரஜினி முதல்வராகவும், கமல் துணை முதல்வராகவும் இருக்க வேண்டும். இந்த கட்சியில் அஜித், விஜய் இணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒருசிலர் கூறி வரும் நிலையில் சினிமா நடிகர்களாலும் சிறப்பான ஆட்சியை தர முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். யார் அரசியலுக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்று முடிவு செய்வது மக்கள் தானே தவிர அதை அரசியல் கட்சி தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் தீர்மானிக்க முடியாது' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments