'வலிமை' அப்டேட் தந்த இசையமைப்பாளர் தமன்: என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் பல மாதங்களாக வெளியிடாத நிலையில் இந்த அப்டேட்டை பிரதமர் முதல் முதல்வர் வரை அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அஜீத் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித்தின் அறிக்கைக்கு பின்னரும் அவரது ரசிகர்கள் பலரிடமும் ’வலிமை’ அப்டேட்டை கேட்பதை நிறுத்தவில்லை. அந்த வகையில் சமீபத்தில் ’வலிமை’ அப்டேட்டை அந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாத இசையமைப்பாளர் தமன் அவர்களிடம் அஜித் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒரு பதிலை தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வரும் இன்னொரு படம் ’நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ’வக்கீல் சாஹேப். இந்த படத்தின் அப்டேட்டை இசையமப்பாளர் தமன் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்த நிலையில் அவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ’வலிமை’ அப்டேட்டை கேட்டார்.

இதற்கு அவர் சமீபத்தில் ’வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ’வலிமை’ படத்திற்கு கம்போஸ் ஒரு பாடலை கேட்டேன். மிகவும் சூப்பராக இருந்தது. அஜித்துக்கு மிகவும் பொருத்தமாக இந்த பாடல் இருக்கும் என்று கருதினேன் என்று கூறியுள்ளார். ’வலிமை’ படத்தின் அப்டேட்டை அந்த படத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் கூறியிருப்பது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஓவியாவின் #GobackModi டுவிட்டிற்கு இதுதான் காரணமா?

தேர்தல் நடைபெறும் நேரங்களில் திடீரென அரசியல் கட்சிகளுக்கு நடிகர்-நடிகைகள் பிரச்சாரம் செய்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஓவியா பிரச்சாரம்

நடுவருடன் வாக்குவாதம்- புது நெருக்கடியில் கேப்டன் வீராட் கோலி?

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை நேற்று சமன் செய்தார்.

விவசாயிகள் பிரச்சனையை அடுத்து விநாயகர் பிரச்சனையில் சிக்கிய ரிஹானா!

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது

பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சப்பட்ச தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு!

பீகாரில் 11 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு மரணத் தண்டனை வழங்கி பாட்னா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

என் பாட்டு வரியை எனக்கே மாற்றி அனுப்புகிறார்கள்: பெட்ரோல் விலையுயர்வு குறித்து வைரமுத்து!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ இன்னும் ஒரு சில நாட்களில் தொட்டுவிடும்