சித்தார்த் படத்தில் இணைந்த 2 பிரபல இசையமைப்பாளர்கள்

  • IndiaGlitz, [Thursday,February 07 2019]

ஒரு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் ஒரு பாடலை பாடும் டிரெண்ட் கோல்வுட்டில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த வகையில் சித்தார்த் நடிக்கும் படம் ஒன்றில் இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர்.

சித்தார்த், கேதரின் தெரசா நடிப்பில் இயக்குனர் சாய்சேகர் இயக்கி வரும் படம் 'அருவம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் எஸ்.தமன் ஒரு பாடலை கம்போஸ் செய்து, இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார். இதனையறிந்த யுவன்ஷங்கர் ராஜாவும் மகிழ்ச்சியுடன் இந்த பாடலை பாட ஒப்புக்கொண்டார்.

இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்ததாகவும், ஒலிப்பதிவு மிகவும் ஜாலியாக இருந்ததாகவும், எஸ்.தமன், யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.