ரம்யாகிருஷ்ணனிடம் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது ஏன்?

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

'பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய திரைப்படமான 'பாகுபலி 2' படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகாமி என்ற கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் ராஜமெளலி பகிரங்கமாக பொது மேடையில் மன்னிப்பு கேட்டார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஜமெளலி, ''பாகுபலி' திரைப்படத்தில் மிக முக்கிய, அழுத்தமான கதாப்பாத்திரம் சிவகாமி. இந்த கதாப்பாத்திரத்திற்காக வேறு ஒரு நடிகையை முதலில் தான் அணுகியதை எண்ணி வெட்கப்படுவதாகவும், அதற்காக ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ராஜமெளலி கூறினார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு இசை வெளியீட்டு விழாவிலும் மன்னிப்பு கேட்ட ராஜமெளலி, சென்னையில் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதே கேரக்டரில் நடிக்க மோகன்பாபுவின் மகள் லட்சுமிமஞ்சுவை படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் பிரபாஸ், ராணாவுக்கு அம்மாவாக நடிக்க லட்சுமி மஞ்சு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கேரக்டருக்கு படக்குழுவினர் ஸ்ரீதேவியையும் அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால் பின்னர் ரம்யாகிருஷ்ணனனை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்பட்டது.

More News

ராதிகாவின் ராடன் மீடியாவில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று அறிவித்த அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டனர்...

இன்று முதல் 'வடசென்னை', வெள்ளி முதல் 'பவர்பாண்டி'

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா மற்றும் பலர் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வரும் வெள்ளி முதல் உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

கணவர் அழகாக இல்லை. திருமணமான 8 நாளில் கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி

'கொலையும் செய்வாள் பத்தினி' என்று பழைய பழமொழி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...

'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் ஆப் உதவியால் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

இளையதளபதி விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மருத்துவ மாணவியான இலியானா கூறும் டிப்ஸ் மூலம் விஜய் பிரசவம் பார்த்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாக்பூர் அருகே ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு மருத்துவ மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் சீனியர் மருத்துவரின் உதவ

சென்னை அண்ணா சாலையில் சற்றுமுன் மீண்டும் விரிசல். போக்குவரத்து பாதிப்பு

சென்னை அண்ணா சாலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி, அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தபித்திருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது...