அப்படி போடு அறுவால! மெர்சல் அறிவிப்பு குறித்து பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் சற்று முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்த போஸ்டருக்கு பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புதிய போஸ்டரில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற வார்த்தைக்கு 'அப்படி போடு அறுவால' என்று கமெண்ட் அடித்துள்ளார். அவரது கமெண்ட்டிற்கு உள்ள அர்த்தம் அனைவருக்கும் புரியும் என்று நம்பப்படுகிறது.
மேலும் 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்று எஸ்.ஜே.சுர்யாவுக்கு ஒரு சிறப்பான நாளும் கூட. அவர் நடித்த 'ஸ்பைடர்' படத்தின் டீசர் வெளியாகிய இன்றுதான் அவர் நடித்த இன்னொரு படமான 'மெர்சல்' சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பும் போஸ்டரும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Apdipodu aruvala ha ha ha sema lyric ..... super sir ... 👍sjs https://t.co/PF9LHNNHHJ
— S J Suryah (@iam_SJSuryah) August 9, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com