close
Choose your channels

என் மகனுக்கு விஜய்ன்னு ஏன் பேர் வைச்சேன் தெரியுமா? எஸ்.ஏ.சி

Thursday, February 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட நிலையில் இன்று விஜய்யின் தந்தைதான் எஸ்.ஏ.சி என்று கூறும் அளவுக்கு விஜய்யின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் புகழுக்கு காரணம் அவருக்கு நான் வைத்த பெயர்தான் என்றும், அவருக்கு ஏன் விஜய் என்று பெயர் வைத்தேன் என்பது குறித்தும் எஸ்.ஏ.சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.


விஜய் என்றாலே 'வெற்றி' என்றுதான் அர்த்தம் என்றும் இந்த பெயர் மீது தனக்கு பெரிய கிரேஸ் இருந்தது என்றும் கூறிய எஸ்.ஏ.சி, தன்னுடைய பெரும்பாலான படங்களின் ஹீரோவின் பெயர் விஜய்தான் என்றும், தன் மகனுக்கும் இதே பெயரை வைத்ததற்கு இதுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 'நையப்புடை' படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் பெயரும் பா.விஜய் என்றும், இந்த படத்தின் இயக்குனர் பெயரும் விஜய் கிரண் என்றும் இருப்பதால் இந்த படமும் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment