close
Choose your channels

வேங்கை மகனாக மாறிய டெட் பூல் - தமிழ் ட்ரைலர் விமர்சனம்

Thursday, March 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேங்கை மகனாக மாறிய டெட் பூல் -  தமிழ் ட்ரைலர் விமர்சனம்

ரயன் ரெனோல்ட்ஸ் நடிப்பில் செம ரகள காமடி படமாக வந்த டெட் பூல் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்குறது நம் தமிழ் ரசனைக்கேற்ப  "வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்னு ஒரு ஜோறுல டைலாக் பேசிட்டேன் மொத்தமா வந்துட்டானுங்க அவனுகள அடிச்சிட்டு வர லேட் ஆயிடிச்சு". என்று காதலியிடம் டெட் பூல் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது காமடி பிளஸ் அதிரடி. 

வேட்டையாடு விளையாடு படத்தில் வந்த கமல் டைலாக்கான "எங்கிட்ட மோதக்கூடாதுன்னு ஒங்கொம்மா சொல்லித்தராலயா" என்றும் "எதுவும் கிழியிலானா மறுபடியும் சந்திப்போம்"  என்று படு லோக்கல் உரையாடல்களுடன் டப் செய்யப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தை பொறுத்தவரை முதல் பாகத்தை போல் இதிலும் நிறைய நக்கல்கள் நய்யாண்டிகள் அடல்ட் காமடி மற்றும் இடை விடாத ஆக்க்ஷன் என்று படம் களை கட்டப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. 

டேவிட் லீஷ் இயக்கியிருக்கும் டெட் பூல் 2 படத்தில் ரயன் ரெனோல்ட்ஸ், ஜாஷ் ப்ரோளின், சாக்ஷி பீட்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் உலகம் முழுவதிலும் படம் மே 18 ஆம் தேதி வெளியாகிறது . அதுவரை இந்த ட்ரைலரை பார்த்து மகிழலாம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment