ரூ.220 கோடி சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்: யூடியூப் ஆச்சரியம்
- IndiaGlitz, [Wednesday,December 23 2020]
ரஷ்யாவை சேர்ந்த 9 வயது சிறுவன் ரூபாய் 220 கோடி சம்பாதித்து உலகின் அதிக வருவாய் பெறும் யுடியூபர்களில் முதலிடம் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் புதிய பொம்மைகளை பேக்கில் இருந்து பிரித்து ரிவ்யூ செய்யும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனலில் தற்போது 27 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் 12 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பெறப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுவன் புதிய பொம்மைகளை வாங்கி அதை பிரித்து அந்த பொம்மை குறித்து ரிவ்யூ செய்வது மட்டுமன்றி அந்த பொம்மை பொருட்களுடனும் விளையாடவும் செய்கிறார். குறும்புத்தனமும் குழந்தைதனமாகவும் உள்ள இந்த சிறுவன் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
சிறுவர்கள், சிறுமிகள் மட்டுமன்றி பெரியவர்களும் இவருடைய வீடியோவை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த சிறுவனின் யுடியூப் சேனலின் வருவாய் சுமார் 29.5 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடதக்கது. இது இந்திய மதிப்பில் சுமார் 220 கோடி ஆகும் .
இதனை அடுத்து ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் யூடியூபர்களில் முதலிடத்தை ரியான் பெற்றுள்ளார் என அறிவித்துள்ளது. இந்த சிறுவனின் அடுத்த இலக்கு அமேசான் மற்றும் வால்மார்ட்டில் இருந்து பொம்மை பொருட்களை வாங்கி, அந்த பொருட்களை ரிவ்யூ செய்வது என்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூபில் அதிக வருவாய் பெறுபவர்களில் முதலிடத்தை பிடித்திருப்பது 9 வயது சிறுவன் என்பது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.