ருத்ரதாண்டவம் எடுத்த ருத்ராஜ்… புகழ்ந்து தள்ளிய தல தோனி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல் 14 ஆவது சீசன் போட்டிகள் நேற்றுமுதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் வியப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சிஎஸ்கே கேப்டன் தல தோனியும் ருத்ராஜ்-ஜடேஜா கூட்டணியைப் பாராட்டியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் முதல் இரண்டு ஓவர்களிலேயே தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற மனநிலைக்கு செல்லும் அளவிற்கு களத்தில் தாறுமாறான விஷயங்கள் நடைபெற்றன.
சிஎஸ்கே அணியில் இருந்து நேற்று முதலில் பேட்டிங்க் செய்த டூபிளசிஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் டக்அவுட் ஆனார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் மொயின் அலியும் கேட்ச் கொடுத்ததால் முதல் ஓவரிலேயே சிஎஸ்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா போல்ட் ஓவரில் ஷாட் அடித்து 4 ரன்களுடன் களத்தைவிட்டு வெளியேறினார். அடுத்து அணியை காப்பாற்ற வேண்டிய தல தோனியும் வெறும் 3 ரன்களை எடுத்து வெளியேறினார்.
இதனால் சிஎஸ்கே வெறும் 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் சிஎஸ்கே இனி 100 ரன்களைத் தாண்டுவதே கடினம் எனும் கருத்துக் கூறப்பட்டது. இந்நிலையில் கெய்க்வாட் ருத்ராஜ்- ஜடேஜா கூட்டணி சரியாக ஆடி சிஎஸ்கேவை காப்பாற்றியுள்ளனர்.
சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்துவரும் ருத்ராஜ் நேற்று நிதானமாக ஆடி 58 பந்துகளுக்கு 88 ரன்களைக் குவித்து இருந்தார். அவருக்கு ஜடேஜா பக்கபலமாக இருந்து அவரும் 26 ரன்களை எடுத்து இருந்தார். இதனால் சிஎஸ்கே 5 ஆவது விக்கெட்டுக்கு மட்டும் 91 ரன்களை குவித்து இருந்தது. இதனால் சென்னை சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை குவித்து இருந்தனர். இந்த சாதனை ருத்ராஜ் ஆல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தனர். டிக்காக் 17 ரன்களுக்கு அவுட்டாக அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்களுக்கு வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட சூர்யகுமார் யாதவ் நேற்று வெறும் 3 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த இஷான் கிஷன் 11 ரன்களை எடுத்தும் கெயின் பொல்லார்ட் 18 ரன்களை எடுத்த நிலையிலும் வெளியேறினர்.
இந்நிலையில் நிதானமாக ஆடிய சௌரப் திவார் 40 பந்துகளுக்கு 50 ரன்களை குவித்து இருந்தார். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் சென்னை சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்துடன் நேற்று வெற்றியை கொண்டாடினர். இதுகுறித்து கருத்துப்பகிர்ந்து கொண்ட தல தோனி ருத்ராஜ்-ஜடோஜா கூட்டணியை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com