இந்த வாரத்தில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறதா? அப்போ இந்தியாவிற்கு?

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

இந்த வாரம் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிச்-5 பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி, சுகாதாரத்துறை ஒப்புதலுக்குப்பின் பரவலாகப் பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. இத்தகவலால் உலக நாடுகளிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

உலகில் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து உள்ளதாக கடந்த ஜுலையில் ரஷ்யா அதிபர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதோடு உலகிலேயே முதன்முதலில் மருத்துவப் பதிவையும் இந்த தடுப்பூசிதான் பெற்றிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து , சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 2 ஆம் கட்ட சோதனையை எட்டியிருந்தாலும் ரஷ்யா எல்லாவற்றையும் விட மிக விரைவான வேகத்தில் பொது பயன்பாட்டுக்கு கொண்டுவரும் என உலக மக்களிடையே புது நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டது.

அதேநேரத்தில் ரஷ்யா கொரோனா தடுப்பூசியை முறையான பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவசர கதியில் வெளியிடுகிறது என விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இப்படியான பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது கமாலியா ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஆப் எபிடெமியாலஞி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-5 (SputnikV) தனது 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்து இருக்கிறது. அதோடு 2 கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பான நோய்எதிர்ப்பு சக்தியை மனித உடலில் உண்டாக்கி இருப்பதாகவும் லான்சன்ட் ஆய்விதழ் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

இதனால் செப்டம்பர் 10 முதல் 13 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப் படுவதாகவும் செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன. 3 ஆம் கட்ட சோதனைக்கு செல்லாமலே பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர ரஷ்யா முயற்சிக்கிறது என விமர்சிக்கப்பட்ட நிலையில் அதிபர் புடின் தனது சொந்த மகளுக்கே இந்த மருந்தை செலுத்தி சோதனை செய்து பார்த்தார் என்ற தகவலையும் ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து தற்போது  3 ஆம் கட்ட சோதனையை சௌதி அரேபியா, பிரேசில், ஐக்கிய அரபு நாடுகள், பிலிப்பைன்ஸ் நாடுகளில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்புட்னிக்-5 (SputnikV) தடுப்பு மருந்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாஸ்கோ பல்கலைக் கழகத்திடம் அனுமதி கோரப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 கட்ட சோதனைகளில் வெற்றிகரமான முடிவுகள் எட்டப்பட்டு இருப்பதால் இந்த மருந்தை தயாரிக்க உலக நாடுகள் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியா, பிரேசில் மெக்ஸிகோ, சவுதி அரேபியா, இன்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் தடுப்பூசி மருந்தின் தகவல்களை ரஷ்யா இந்தியாவுடன் பகிர இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

More News

ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பத்தில் தனுஷ்!

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி கொண்டு வருகிறது

எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவ்: கிரிக்கெட் பார்க்கின்றார்: எஸ்பிபி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்தமில்லாமல் ஒரு சரித்திர சாதனை… அரசு பள்ளிகளில் குவியும் அட்மிஷன்கள்!!! தமிழக அரசு அதிரடி!!!

கொரோனா காலத்தில் பள்ளி, கல்வி குறித்த செயல்பாடுகளில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நம்ம ஊர்லையும் கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா! பகீர் தகவல்!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு  மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது

ஒரு ஈயை கொல்லப்போய் வீட்டையே கொளுத்திய தாத்தா!!! வைரல் சம்பவம்!!!

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் ஈயைக் கொல்லுவதற்கு முயற்சி செய்து வீட்டையே கொளுத்திய சம்பவம் கடும் வைரலாகி இருக்கிறது.