செல்ஃபி எடுக்க முயன்று 15 நிமிடம் உயிருக்கு போராடிய இளைஞர்!

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரை இழந்த சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகமெங்கும் கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரஷ்யாவிலும் ஊரடங்கு உத்தரவு கடந்த சில நாட்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அண்டோன் கோஸ்லாவ் என்ற இளைஞர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது திடீரென அவர் நிலை தவறி விழுந்தார். இருப்பினும் எதிர்பாராதவிதமாக 150 அடி உயரத்தில் அவர் ஒரு கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞர் தன்னை காப்பாற்றும்படி கதறினார். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையில் யாருமே இல்லை என்பதால் அவரது கதறல் யாருக்கும் கேட்கவில்லை

15 நிமிடங்களுக்கு மேலாக அந்த இளைஞர் அலறிக் கொண்டிருந்த நிலையில் தற்செயலாக அந்த பகுதிக்கு வந்த ரோந்து போலீசார் இளைஞர் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக அவரை சென்று காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

தமிழக அரசின் நடவடிக்கைகள் அருமை, அற்புதம், ஆனால்... ராகவா லாரன்ஸ் அறிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக தன்னார்வலர்கள் பலர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும்

முதல்முறையாக நண்பர்கள், உறவினர்கள் இல்லாத கொண்டாட்டம்: ரம்பா வெளியிட்ட வீடியோ

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித கொண்டாட்டமும் இல்லாத நிலையே உள்ளது.

உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா முதல்வரே? கமல்ஹாசன் கேள்வி

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து,

இன்று ஒரே நாளில் 106 கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் 1000ஐ தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில் இன்று பேரதிர்ச்சியாக கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு பாசிட்டிவ்

மத்திய பிரதேச மாநிலத்தில் மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது