செல்ஃபி எடுக்க முயன்று 15 நிமிடம் உயிருக்கு போராடிய இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரை இழந்த சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகமெங்கும் கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரஷ்யாவிலும் ஊரடங்கு உத்தரவு கடந்த சில நாட்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அண்டோன் கோஸ்லாவ் என்ற இளைஞர், தனது வீட்டு ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது திடீரென அவர் நிலை தவறி விழுந்தார். இருப்பினும் எதிர்பாராதவிதமாக 150 அடி உயரத்தில் அவர் ஒரு கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞர் தன்னை காப்பாற்றும்படி கதறினார். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையில் யாருமே இல்லை என்பதால் அவரது கதறல் யாருக்கும் கேட்கவில்லை
15 நிமிடங்களுக்கு மேலாக அந்த இளைஞர் அலறிக் கொண்டிருந்த நிலையில் தற்செயலாக அந்த பகுதிக்கு வந்த ரோந்து போலீசார் இளைஞர் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக அவரை சென்று காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout