69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி? இந்த உண்மையை நம்ப முடிகிறதா?

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

“நாம் இருவர், நமக்கு இருவர்“ என்பதே இன்றையக் காலக்கட்டத்தில் பெரும் சிரமமாக இருக்கிறது. ஆனால் ரஷ்யாவில் வாழ்ந்த பெண்மணி ஒருவர் 69 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார்.

இந்தத் தகவலை கேட்ட சில பேர் உண்மையிலேயே ஒருவர், இப்படி 69 குழந்தைகளை பெற்றிருக்க முடியுமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? எனச் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இந்த ஆச்சர்யத்தை விட இந்த பெண்மணிக்கு பிறந்த குழந்தைகளின் வரிசையை பார்த்தால் நமக்கு தலையே சுற்றிவிடும்.

அதாவது ரஷ்யாவை சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ் என்பவரின் முதல் மனைவி வாலண்டினா. இவர் கடந்த 1707 ஆம் வருடம் “சூயா“ எனும் நகரில் பிறந்துள்ளார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் தொழில் ரீதியான காரணத்திற்காக சில காலம் சிறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தம்பதிகளுக்கு 16 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த வகையில் 32 குழந்தைகள். அடுத்து 7 முறை தலா மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 21 குழந்தைகள். அதேபோல இவர்களுக்கு 4 முறை தலா 4 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 16 குழந்தைகள். இப்படியே வாலண்டினாவிற்கு 69 குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை கேட்கும் நம்மில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தத் தகவலை 1782 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி “நிக்கோல்ஸ் மடாலயம்“ எனும் பத்திரிக்கையில் கூறப்பட்டு ஈருக்கிறது. அதேபோல 1783 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்“ எனும் பத்திரிக்கையிலும் இந்த அதிசயம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து விசாரணை செய்த கின்னஸ் ஆய்வுக்குழு இந்தத் தகவலை உண்மை என நிரூபித்து இருக்கிறது. கூடவே Guinness word Book of Reports புத்தகத்திலும் வாலண்டினாவின் பெயரை இடம்பெற இருக்கிறது. வாலண்டினா - ஃபியோடர் வாசிலியேவ் தம்பதிகளை நினைத்தால் மலைப்பாக இருக்கிறதா? இதைத்தவிர வாசிலியேவ்விற்கு இரண்டாவது மனைவியும் இருந்தாராம். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்ற தகவல் கின்னஸ் அதிகாரிகளிடம் இல்லை.

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நம்முடைய நெட்டிசன்கள் எப்படி வாலண்டினாவிற்கு தொடர்ந்து இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகள் என ஒரே பிரசவத்தில் பிறந்திருக்கும்? எனவும் கேள்வி எழுப்பி, வியந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.