2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்!!! அதிரடி அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பரபரப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது உலக நாடுகளில் அரசியல் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் பங்கெடுக்க முடியாது என்று இருந்த நாட்டின் அரசியல் சாசனத்தையே திருத்தி நீண்ட காலத்திற்கு இவர் தான் அதிபராக இருப்பார் என்றொரு புது சட்டத் திருத்தத்திற்கு ஒரு நாட்டின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர். இந்தத் திருப்பம் உலக அளவில் மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது.
ரஷ்யாவின் அரசியல் சாசனத்தின்படி ஏற்கனவே 2 முறை அதிபராக பதவி வகித்த ஒருவர் மீண்டும் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்யாவின் அதிபராக பதவி வகிக்கும் விளாடிமிர் புடினின் பதவிக்காலம் வரும் 2024 ஆம் ஆண்டோடு முடிவடைகிறது. இதனால் அவருடைய பதவிக்காலத்தை மேலும் நீடிக்க அரசியல் சாசனத்தையே திருத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார் அதிபர் புடின். எனவே ரஷ்யாவின் அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தும் யோசனையை 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் அதிபர் விளாடிமிர் புடின் முன்வைத்தார். அதன்படி பதவியில் இருப்பவர் மேலும் இரண்டு முறை அதாவது தலா ஆறு ஆண்டு காலம் அப்பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்காக கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு ஜுலை 1 ஆம் தேதி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது. வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்று 2036 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புடினே நீடிப்பார் என்ற சட்டத்திருத்தமும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அந்தச் சட்டத் திருத்தில் அதிபர் புடின் கையெழுத்து இட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டத்திருத்தத் தீர்மானம் அந்நாட்டின் நாடுளுமன்றக் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே மக்கள் வாக்கெடுப்புக்கு சென்றதும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் தற்போது, பொது மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு பொய்யானது என்ற விமர்சனத்தையும் வைத்து வருகின்றனர். ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் தொடருவதற்கு அந்நாட்டின் 77.93 விழுக்காடு மக்கள் ஒப்புதல் அளித்து இருக்கின்றனர். வெறுமனே 21.6 விழுக்காடு மக்கள் அதிபருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வலிமை வாய்ந்த மனிதாராக விளாடிமிர் புடின் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
பொது மக்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ரஷ்ய சமூகத்தினர் 2036 வரை நான் அதிகாரத்தில் இருக்கும் வகையிலான சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதில் ஒருமைப் பாட்டைக் காட்டியுள்ளனர். அவர்கள் சட்டத் திருத்தத்தின் தேவையை உணர்ந்து உள்ளனர். நாட்டுக்குத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் தேர்தல் முடிவுகளின் மூலம் உச்சபட்ச ஒற்றுமையை ரஷ்யர்கள் காட்டியுள்ளனர்" என்று தெரிவித்து உள்ளார். மேற்குல நாடுகளில் நடந்து வரும் முதலாளித்துவ அரசியல் அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து புடினுக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்து வருவதாகவும் தற்போது அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments