உலகம் அழியப்போகிறதா..? பூமியில் விழுந்த ராட்சத ஓட்டை!
- IndiaGlitz, [Saturday,May 18 2019]
இந்த உலகம் அழிவை நோக்கி செல்கிறதா? என்கிற பய உணர்வை ஏற்படுத்தியுள்ளது, சின்க்ஹோல் எனப்படும் ராட்சத ஓட்டை.
பொதுவாக சின்க்ஹோல் எனப்படும் பூமி தானாகவே உள்வாங்கும் சம்பவங்கள் அதிகமாக ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் தான் அடிக்கடி நிகழும். ஆனால் முதல்முறையாக ரஷ்யாவில் உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய அளவில் பூமி உள்வாங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நிலச்சரிவு, சுனாமி, நிலநடுக்கம், வெட்பமயமாதல், போன்ற இயற்கை சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோல் திடீரென பூமி உள்வாங்கும் சம்பவங்களும் இயற்கை அழிவாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில் ரஷ்யாவில், துளு நகரத்தில் உள்ள தேடிலோவா என்ற கிராமத்தில் சின்க்ஹோல் எனப்படும், இந்த ராட்சத ஓட்டை உருவாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் அங்கிருந்த ஒரு தோட்டம் முழுவதும் பூமிக்குள் சரிந்து கிராமமக்கள் அச்சத்தில் உறையவைத்துள்ளது.
திடீர் என பூமி உள்வாங்கிய சம்பவம் நிகழ்ந்தது குறித்து ஆராச்சியாளர்கள் அதன் காரணத்தை கண்டறிய முயற்சித்து வருகிறார்கள். மேலும் இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்போரை அதிரவைத்துள்ளது.
A large sinkhole is formed in Dedilovo, Tula Oblast, Russia.
— Corelion, LLC (@corelionnews) May 15, 2019
Source: Alerta Roja#corelionnews #news #new #present #travel #world #worldnews #interesting #information #moment #impact #video #sinkhole #environment #nature #russia #tulaoblast #photo #photography #presente #today pic.twitter.com/nZ5uM32qZF