இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா தற்போது உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 18 வயது இளம்பெண் லோகினோவா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன் மற்றும் அழகு தொடர்பான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது ரஷ்ய காவல்துறை எடுக்க இருப்பதாகவும், அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்து 50 ஆயிரம் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் 18 வயது லோகினோவா என்பவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உக்ரைன் படையெடுப்புக்கு பின்னர் ரஷ்ய நீதிமன்றம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீதிமன்ற தடைக்கு பின்னர் வழக்கு தொடரப்பட்ட முதல் நபராக லோகினோவா உள்ளார்.
தற்போது லோகினோவா பிரான்ஸ் நாட்டில் இருந்தாலும் ரஷ்யாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து மிரட்டி இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியதற்காக ஆறு ஆண்டுகள் வரை உங்கள் மகளுக்கு தண்டனை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
தான் மிகவும் தனித்து இருப்பதாகவும் தனக்கு சட்ட உதவி தேவை என்றும் லோகினோவா தனது இன்ஸ்டாகிராமில் ரஷ்ய மொழியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments