கொரோனா சிகிச்சை மருந்து: கல்லாக்கட்டும் ரஷ்யா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இதுவரை முறையான மருந்துகள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. உலகச் சுகாதார நிறுவனம் சில மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாமா எனச் சோதித்து வருகிறது. மேலும், சில மருந்துகளை மட்டும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துமாறு வழிகாட்டுதலையும் WHO கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், Remdesivir, இண்டர்பிரான் போன்ற மருந்துகள் பரிசீலனையில் இருந்து வந்தன. இதில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்க விளைவுகளை கொடுப்பதாக அறிவியல் ஆய்விதழ் Lancet கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அந்த மருந்தை பரிசீலனை பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது WHO.
தற்போது இண்டர்பிரான், Remdesivir மருந்துகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா Remdesivir மருந்து தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறது. இத்தகைய நெருக்கடியான நிலையில் ரஷ்யா தற்போது அவிஃபாவிர் (Avifavir) என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப் பட்ட மருந்தாக அறிவித்து இருக்கிறது. இந்த மருந்து கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்றுவிட்டால் அங்கு பல்லாயிரக் கணக்கான பிரதிகளை எடுப்பதை தடை செய்யும் ஆற்றல் பெற்றது எனக் கூறப்படுகிறது.
மனித உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் செல்களில் தங்கி பல்லாயிரக் கணக்கான பிரதிகளாக வைரஸை உற்பத்தி செய்து பின்னரே மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அதன் பெருக்கத்தை குறைக்க இந்த மருந்து பெரிதும் உதவியாக இருக்கும் என ரஷ்ய மருந்து நிர்வாக தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி கிரில் டிமிட்ரி குறிப்பிட்டு உள்ளார். அவிஃபாவிர் (Avifavir) ரஷ்யாவின் அனைத்து மாகாணங்களுக்கும் கிடைக்குமாறு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
இந்த மருந்து ஆய்வு நிலையில் இருக்கும்போதே அந்நாட்டு சுகாதாரத் துறை அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு மாகாணத்திலும் குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு மருந்து கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா சிகிச்சையில் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த மருந்தை தற்போது 10 நாடுகள் இறக்குமதி செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பில் ரஷ்யா 4 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்நிலையில் தேவைப்பட்டால் 2 மில்லியன் அவிஃபாவிர் (Avifavir) மருந்து தயாரிக்கப்படும எனவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com