தனக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தையே தடுத்து நிறுத்திய ரஷ்யா? நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Saturday,February 26 2022]


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 நாடுகள் இணைந்து கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியிருப்பது உலக அளவில் கடும் அழுத்ததத்துடன் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் க்வ்வை ரஷ்யா இராணுவம் நெருங்கியுள்ள நிலையில் தான் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்சி பேசியிருந்தார். இதையடுத்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவை தொடர்பு கொண்டு தங்களது நாட்டிற்கு ஆதரவாக ரஷ்யாவிடம் வலியுறுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து இந்திய பிரதமர் ரஷ்ய அதிபரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா, அல்பேனியா போன்ற நாடுகள் ஐ.நா சபையில் வரைவுத் தீர்ம்னத்தை கொண்டுவந்தன. இதற்கு போலந்து, இத்தாலி, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவுத் தெரிவித்தன. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கிய போது, 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் 11 எதிர்ப்பு ஓட்டுகள் விழுந்தபோதிலும் ரஷ்யா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு வரைவு தீர்மானத்தை தகர்த்தியிருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யாவிற்கு வீட்டோ அதகாரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி ரஷ்யா தனக்கு எதிரான வரைவு தீர்மானத்திற்கு எதிர்ப்பாக வாக்களித்தது. இதைக் கணக்கில் எடுத்துக்கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோற்றுவிட்டதாகத் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஐ.நா வாக்கெடுப்பில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இந்தியா சார்பாக ஐ.நா. அவையில் பேசிய டிஎஸ் திருமூர்த்தி பேச்சுவார்த்தை மூலமே உக்ரைன் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது எனக் கூட்டத்தில் பேசினார்.

இதையடுத்து நடைபெற்ற ரஷ்யாவிற்கு எதிரான வரைவு தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்தியா பக்கசார்பு இல்லாமல் செயல்பட நினைக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தனக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட இருந்த வரைவு தீர்மானத்தை ரஷ்யா தற்போது தடுத்தி நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி செய்யும் என்று முன்னமே தெரியும், ஆனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டதை தெரிவிக்கவே இப்படி தீர்மானம் கொண்டுவந்தோம் என்று மேற்குலக நாடுகள் தற்போது விளக்கம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'வலிமை' இரண்டாவது நாள் வசூல்: ரஜினி, விஜய்யை முந்திவிட்டாரா அஜித்?

அஜித்தின் அடுத்த 'வலிமை' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது இரண்டாவது நாள் வசூல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு நாள் வசூல் ரஜினி விஜய் படங்களின்

'தலைவர் 169' படத்தில் இணையும் 'டாக்டர்', 'பீஸ்ட்' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தலைவர் 169' திரைப்படத்தில்  நெல்சன் இயக்கிய 'டாக்டர் மற்றும் 'பீஸ்ட்' படங்களில் நடித்த நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

தனுஷ் பட டிரைலரை வெளியிடுவது சிம்புவா? ஒரு ஆச்சரிய தகவல்!

தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தாலும் திரையுலகை பொறுத்தவரை இருவரும் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர் என்பதும் இருதரப்பு ரசிகர்களும்

பிக்பாஸ் அல்டிமேட்: கடந்த வாரம் டபுள் எவிக்சன், இந்த வாரம் எத்தனை தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

அவர் இயக்குனர் அல்ல, பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்: தமிழ் நடிகை ஆவேசம்

பிரபல இயக்குனர் ஒருவரை அவர் இயக்குனர் அல்ல, பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர் என தமிழ் நடிகை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.