உக்ரைனில் வீசப்படும் குண்டுமழை… பதற்றத்தின் உச்சக்கட்டத்தில் உலக நாடுகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழைய சோவியத் நாடுகளுள் ஒன்றான உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான “நேட்டா“வுடன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இராணுவப் படைகளை ரஷ்யா உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் குவித்துள்ள நிலையில் தற்போது ஒருசில இடங்களில் குண்டுமழை பொழிவதாகவும் சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா கைவிட வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதே கருத்தை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று கிழக்குப் பகுதிகளில் உள்ள 2 மாகாணங்களை கிளர்ச்சியாளர்கள் மூலம் கைப்பற்றிய ரஷ்யா அதைத் தனி குடியரசு நாடுகளாகவும் அறிவித்தது.
இதையடுத்து கிழக்குப் பகுதி மாகாணங்களின் பிரச்சனை குறித்து உடனடியாக தீர்வுகாணப் பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதற்கு எந்தப் பதிலையும் கூறாத ரஷ்ய அதிபர் உக்ரைனில் மீது இராணுவத்தினரை ஏவியுள்ளார். இதனால் உக்ரைன் தலைநகர் க்யூ மற்றும் கிழக்கு எல்லைப் பகுதியான டோனஸ்க், ஓடேசா, கார்கிங், மைக்சேல், மரியுபோல் போன்ற இடங்களில் குண்டுமழை பொழிவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் இராணுவ நடிவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க முதற்கட்ட பொருளதாரத் தடையை விதித்து இருக்கிறது. மேலும் அவசர நிதி பரிமாற்றத்திற்கு உதவும் ஸ்விஃப்ட் முறையையும் ஜோ பைடன் தடைசெய்துள்ளார். இதனால் கடுப்பான ரஷ்யா அதிபர் புடின் எங்கள் விவகாரத்தில் தலையிட முற்பட்டால் அல்லது எங்களுடைய நாட்டுக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் அதற்கு ரஷ்யா உடனடியாகப் பதிலடி கொடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் உங்களுடைய வரலாற்றிலேயே இதற்கு முன்பு நீங்கள் சந்தித்திராத கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் புடின் எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து உக்ரைன் நாட்டு இராணுவ தங்களது நடவடிக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். நாசிச வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய மக்கள் ரஷ்யா மக்கள் போரை விரும்புகிறீர்களா? என வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாங்கள் நாஜிக்கள் அல்ல போர் செய்வதற்கு என்றும் காட்டமாக பதிலளித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்துவரும் போர் நடவடிக்கைகளை பல உலகநாடுகள் எதிர்த்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை அறிவிக்கவும் துவங்கியிருக்கின்றன. இதனால் கடுயைமான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக 241 பேர் கொண்ட ஏர் இந்திய விமானம் இந்தியா திரும்பிய நிலையில் இன்றுகாலை 182 பேர் கொண்ட மற்றொரு விமானமும் இந்தியா திரும்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout