டாக்சி டிரைவரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 29 2016]

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பாரத பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்ற பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுக்கு தெரிந்தவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது. கடந்த மாதம் வரை சுமார் 1.05 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் பிரதமரின் அறிவிப்புக்கு பின்னர் இந்த கணக்குகளில் போடப்பட்டுள்ள டெபாசிட் ரூ. 64,250 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங் என்ற டாக்ஸி டிரைவரின் ஜன் தன் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் வரை ரூ.200 மட்டுமே இருந்துள்ளது. ஆனால் திடீரென தனது கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட் செய்திருப்பதை பல்வீந்தர் சிங் அறிந்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ஆனால் அவருடைய மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வங்கியில் சென்று அவர் இதுகுறித்து விசாரித்தபோது அவருக்கு புதிய பாஸ்புக் ஒன்றை கொடுத்தனர். அதில் அவர் வைத்திருந்த ரூ.200 மட்டுமே இருந்தது.

இதுகுறித்து வங்கியின் தரப்பில் பத்திரிகையாளர்களிடம் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வங்கியின் அக்கவுண்ட் மேலாளர் தவறுதலாக, மேற்கொண்ட பிழையால் பல்வீந்தர் சிங் சேமிப்புக் கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் இது பணம் டெபாசிட் தொகை அல்ல என்றும், வங்கியின் கணக்கு விவர எண்ணை டெபாசிட் பகுதியில் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறினர். இந்த தவறு தற்போது நீக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய பாஸ் புக் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

More News

டாக்சி டிரைவரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்? அதிர்ச்சி தகவல்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பாரத பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்ற பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுக்கு தெரிந்தவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது. கடந்த மாதம் வரை சுமார் 1.05 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் வ&

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் எப்படி? தமிழக அரசு தகவல்

மத்திய அரசு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 20 நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னும் ஏடிஎம் வாசலில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

மோடியை பதவியில் இருந்து இறக்க அரை மொட்டை மனிதர் செய்த சபதம்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் இந்தியாவில் பல்வேறு விநோத சம்பவங்களும், சோக சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இதுவரை வாரம் ரூ.24,000. இனிமேல் அப்படி இல்லை. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

ரூ.500 ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அதாவது ஒருவர் தனது வங்கியில் எத்தனை கோடி இருந்தாலும் வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதே அந்த கட்டுப்பாடு